Fri. Dec 20th, 2024

குஜராத் பாம்பே மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து – வைரலாகும் வீடியோ!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பாம்பே மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத்தின் பாம்பே மார்க்கெட்டில் உள்ள ஒரு ஷோரூமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்தடுத்து கட்டிடங்களுக்கு பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும்தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.