தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது – மு.க.ஸ்டாலின் உரை
சென்னையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் 2 நாள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், அமைதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு சிலர் செயல்படுவர், அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது. கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார்.