Fri. Dec 20th, 2024

பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை உயிரிழந்தார்!

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை சென்னையில் உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் ‘என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘கஜேந்திரன்’ உட்பட திரைப்படங்களின் தயாரிப்பாளராக வி.ஏ.துரை இருந்தார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

இவர் கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த வி.ஏ.துரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு நடிகர்கள் ரஜினி, சூர்யா, ராகவா லாரன்ஸ், விக்ரம் உள்பட பலர் உதவி செய்து வந்தனர்.

இந்நிலையில், இவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் நேற்றிரவு 9 மணிக்கு உயிரிழந்தார். இவருடைய உடலுக்கு இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.