Fri. Dec 20th, 2024

ஜிம்பாப்வேயில் நடுவானில் வெடித்து சிதறிய விமானம் – 6 பேர் உடல் கருகி பலி!

ஜிம்பாப்வேயில் நடுவானில் பறந்த விமானம் திடீரென வெடித்து சிதறிய விபத்தில் இந்தியர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முரோவா டயமண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தில் இந்தியரான வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா தன் மகன் மற்றும் நண்பர்களுடன் ஹராரேயில் இருந்து மஷாவா சுரங்கத்திற்கு விமானத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.

ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரின் அருகில் இந்த விமாபம் சென்றுக்கொண்டிருந்தபோது, சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.