தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னையில் சில இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.