மசோதா சட்டமாகியிருக்கிறதே தவிர சட்டம் அமலுக்கு வராது – ப.சிதம்பரம், எம்.பி பேட்டி
மசோதா சட்டமாகியிருக்கிறதே தவிர சட்டம் அமலுக்கு வரவில்லை, அமலுக்கு வராது என்று எம்.பி. ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான ஒரு வரலாற்று தருணத்தில், அதிகாரப்பூர்வமாக ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ எனப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவை மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா லோக்சபாவில் பெரும் ஆதரவைப் பெற்றது. அமோக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது,
பின்னர் ராஜ்யசபாவில் ஒருமனதாக ஒப்புதல் பெற்றது. 215 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனர், இந்த உறுதியான ஒருமித்த கருத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாற வழி வகுத்தது.
இந்நிலையில், மசோதா சட்டமாகியிருக்கிறதே தவிர சட்டம் அமலுக்கு வரவில்லை, அமலுக்கு வராது என்று எம்.பி. ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள செய்தி அறிந்தேன். மசோதா சட்டமாகியிருக்கிறதே தவிர சட்டம் அமலுக்கு வரவில்லை. அமலுக்கு வராது. என்னுடைய கணிப்புப்படி இந்த சட்டம் 2024 தேர்தலுக்கும் வராது. 2029 தேர்தலுக்கும் வராது என்று தெரிவித்தார்.