அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கிடந்த 7UP பாட்டில் – அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் வயிற்றில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் 7UP பாட்டில் ஒன்று இருந்ததைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒரு நபர் ஆசனவாயில் இருந்து ரத்தம் வந்ததாக கடந்த 7 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்து வயிற்றில் எக்ஸ்ரே எடுத்தும் ஸ்கேன் செய்தும் பார்த்தபோது அதிர்ச்சி அடைத்தனர். அவரது வயிற்றுக்குள் செவன் அப்பாட்டில் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவரை பரிசோதனை செய்து அவரது உடல் இயல்பு நிலைக்கு வந்த பிறகு கடந்த 3 தினங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வயிற்றில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலமாக வயிற்றுக்குள் இருந்த 7up பாட்டில் எடுக்கப்பட்டது. வயிற்றுக்குள் எப்படி 7up பாட்டில் சென்றது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் அந்த நபரை மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்றும் வாய் பேச முடியாத நபர் என்பதும் தெரியவந்தது. அவர் தனது ஆசன வாயில் அவரே 7up பாட்டிலை சொருகிக் கொண்டார் என்று சைகையிலேயே போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு காவல்துறை மட்டுமல்ல,மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் சைகை மூலமாக காட்டியது உண்மையா அல்லது வேறு ஏதும் காரணமா எப்படி அவர் வயிற்றுக்குள் பாட்டில் சென்றது என்பது குறித்து காவல் துறையினர் மட்டுமல்லாது மருத்துவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் தற்போது அவர் நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமானுல்லா புதுக்கோட்டை