பொதட்டூர்பேட்டையில் குடிதண்ணீர் வசதி இல்லை என 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்!
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் குடிதண்ணீர் வசதி இல்லை, கழிவு நீர் கால்வாய் சரி இல்லை என்று 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் இறங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 100-வது வார்டில் வசிக்கும் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிதண்ணீர் வசதி வழங்கவில்லை, கழிவு நீர் கால்வாய் வசதி சரியில்லை, தெரு விளக்குகள் இல்லை, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் பல மாதமாக அவதி அடைவதாக குற்றச்சாட்டை முன்வைத்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரியிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
அடிப்படை பிரச்சனைகள் இதனை சரி செய்யவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் செய்வோம். மாவட்ட ஆட்சியர் வந்து தீர்வு காண வேண்டும் என்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று எச்சரிக்கை செய்த பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் மிரண்டு போய் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்
இந்த ஏற்பாடுகளை பெண்கள் முற்றுகையிடும் போது தி.மு.க நிர்வாகிகள் ஏற்பாட்டில் அனைவரும் உடன் இருந்தனர்.
பெண்கள் இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசமாக அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்
முருகன்