சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர் – வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா அஞ்சலி!
சாலை விபத்தில் உயிரிழந்த தன்னுடைய ரசிகர் வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் அரவிந்த் (24) வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யாவின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.