Fri. Dec 20th, 2024

பத்திரிக்கையாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை – கிடைக்க செய்த விமலேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த CHENNAI PRESS CLUB!

பத்திரிக்கையாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை கடந்த 4 ஆண்டுகளாக வழங்கபாடமல் இருந்த நிலையில், அதனை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தியவர் தம்பி விமலேஸ்வரன்.

வழக்கு நடத்த சுமார் 50 ஆயிரம் வரை செலவு செய்து, நீதிமன்றம் கேட்ட உரிய ஆவணங்களை உடனுக்கு உடன் வழங்கினார்.

நீதிமன்றம் தமிழக அரசுக்கு காலக்கெடு விதித்து உறுப்பினர்களை நியமிக்க ஆணையிட்டது.

இது சென்னை பிரஸ் கிளப் பொதுச்செயலாளர் என்ற முறையில் தம்பி விமலேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்…

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்…

என்.செல்வராஜ்
துணை தலைவர்
சென்னை பிரஸ் கிளப்.