திருத்தணி அருகே வெள்ள நீரில் மூழ்கிய கனகம்மா சத்திரம் கிராமம்!
திருத்தணி அருகே கனகம்மா சத்திரம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழை ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் 200 ஏக்கர் பயிர் தண்ணீரில் மூழ்கியது விவசாயிகள் 50 லட்சம் நஷ்டமானது விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது மேலும் இந்த பகுதியில் உள்ள ஏரிகளில் 80 சதவீத தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் ஏரிகள் சரியான முறையில் பராமரிப்பு செய்யாத காரணத்தினால் இந்த ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்த உபரி நீர் ஏரியின் அருகில் பயிர் செய்துள்ள விவசாயிகளின் பயிர்கள் 200 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் நெற்பயிர்கள் செய்துள்ள விவசாயிகள் 50 லட்சம் வரை நஷ்டமானது என்று வேதனையுடன் கூறியுள்ளனர்
மேலும் கடன் வாங்கி விவசாயம் செய்தால் அதிகாரிகள் சரியான முறையில் ஏரிகளை பராமரிப்பு செய்யாததால் இந்த தண்ணீர் விவசாய இடங்களுக்கு வந்து விவசாய நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது. உரிய நிவாரணம் வழங்குவதற்கு அதிகாரிகள் வரவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்
மேலும், இந்த பகுதி சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது ஏரி நீர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. இதனை அகற்ற உள்ளாட்சித் துறை அதிகாரிகள் யாரும் முன் வரவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் வருவாய் துறை அதிகாரிகள் நீரில் மூழ்கிய பயிர்கள் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் ஆகியவற்றிலிருந்து நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
செய்தியாளர்
முருகன்