Fri. Dec 20th, 2024

‘பாப் மன்னன்’ மைக்கேல் ஜாக்சன் தொப்பி சுமார் ₹68 லட்சத்திற்கு ஏலம் போனது!

உலகப் புகழ் பெற்ற பாப் மன்னன் ‘மைக்கேல் ஜாக்சனுக்கு’ கோடானக் கோடி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவர் மறைந்தாலும் இன்று வரைக்கும் அவருக்கான மவுசு இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

‘மைக்கேல் ஜாக்சன்’ தன் வாழ்கையில் பல சவால்களையும், சர்ச்சைகளையும் சந்தித்தார். அவரது வாழ்க்கையே ஒரு விசித்திரமானது. அவரை சுற்றிய ஊடகங்களின் பார்வையும், சட்டப் போராட்டங்களும் அவரது கலை சாதனைகளை மங்கச்செய்துவிட்டது.

“பாப் மன்னன்” என்று உலகமே புகழ்ந்த அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், இசை மற்றும் பொழுதுபோக்கு உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தார். கடந்த 2009ம் ஆண்டு அவர் இந்த உலகத்தை விட்டு போனாலும், அவருடைய திறமையை யாராலையும் ஒப்பிட முடியாது. அவருடைய நடன அசைவும், வசீகரிக்கும் நடன நிகழ்ச்சிகளுக்காக அவர் இன்று வரை நினைவுக்கூறும்.

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் தனது Moon Walk நடனத்தின்போது பயன்படுத்திய தொப்பி, முதல்முறையாக ரூ.68 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.