“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நான் தரிசனம் செய்யத்தான் வந்தேன் – கூட்டணி முறிவுக்கு பதில் சொல்ல மறுத்த எடப்பாடி
விஜயவாடாவில் கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு பதில் சொல்ல எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.
இன்று விஜயவாடாவில் கனக துர்க்கை அம்மன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம் செய்தார்.
இதனையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கனக துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனை தரிசனம் செய்தேன். மிகவும் சிறப்பான தரிசனம்.
நான் தரிசனம் செய்யத்தான் வந்திருக்கிறேன். பாஜக, அதிமுக கூட்டணி குறித்து கேள்வி கேட்காதீங்க என்று தெரிவித்து சென்றார்.