Fri. Dec 20th, 2024

சீமான் தொடர்ந்த வழக்கு – விஜய லட்சுமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

சமீப காலமாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரால் நாம் தமிழர் சீமான் சமூகவலைத்தளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார்.

இதனையடுத்து, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் மூத்த தலைவர் தடா நா. சந்திரசேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், வதந்திகளை அடித்து நொறுக்கும் வகையில் முதன் முதலாக மேடையில் ஏறி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மனைவி கயல்விழி பேசினார். இது சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இதனையடுத்து, மீண்டும் விஜயலட்சுமி சீமான் மீது கோபப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று பேசியது நெட்டிசன்களை நெரிச்சலை உண்டாக்கியது.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 29ம் தேதி விஜயலட்சுமி உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.