புதிய தோற்றம் குறித்து விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!
புதிய தோற்றம் குறித்து விமர்சித்தவர்களை நடிகை எமி ஜாக்சன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடிகை எமி ஜாக்சனின் புதிய தோற்றத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. சிலர் அவரின் லுக்கைப் பார்த்து கிண்டலடித்தனர்.
இது குறித்து தற்போது எமி ஜாக்சன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர், Oppenheimer நடிகர் சிலியன் மார்பி உடன் என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சி தருகிறது. எனது புதிய படத்திற்காகவே இத்தோற்றம் வைத்துள்ளேன். ஆனால், இத்தோற்றத்திற்கு இந்தியாவிலிருந்து விமர்சனங்கள் அதிகமாக வருவது எனக்கு வருத்தம் கொடுக்கிறது.
ஒரு நடிகர், படத்திற்காக தன் தோற்றத்தை மாற்றினால் அது பெரிதாக பேசப்படாது. அதுவே ஒரு பெண் மாற்றினால், அவர்களது அழகு குறித்த வரையறையை மீறி அசாதாரணமாக முடி மற்றும் தோற்றத்தை மாற்றிக்கொண்டால், அவரை விமரசிக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு என நினைத்துக் கொள்கிறார்கள் என்று நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.