Fri. Dec 20th, 2024

தொழிலபதிபர் சண்முகம் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டு!

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை ஓஎம்ஆர் உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். தி.நகர் சரவணா தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலபதிபர் சண்முகம் வீட்டில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முற்பட்டனர். வீடு பூட்டி இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரை தளத்தில் காத்திருந்து பின்னர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொழிலதிபர் சண்முகம் அடிக்கடி விஜய் அபார்ட்மெண்டில் 2-வது மாடியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.