ஆபத்தான முறையில் ஏரிக்குள் சென்று பணி செய்ய வைக்கிறார்கள்… – அதிகாரிகள் மீது பெண்கள் குற்றச்சாட்டு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வேளஞ்சேரி ஊராட்சியில் 100 நாள் பணி செய்யும் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கிராமத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியில் நான்கடி ஆழத்தில் தண்ணீருக்குள் நடந்து சென்று ஆபத்தான பகுதியில் ஏரிக்குள் பணி செய்ய வைப்பதாக பெண்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
மேலும் இப்படி ஆபத்தான முறையில் தண்ணீருக்குள் இறங்கி சென்று செல்லும் பொழுது பாம்புகள் கூட ஒரு சில நேரத்தில் வருவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களுக்கு அசம்பாவிதங்கள் உயிர் போன நிலை ஏற்பட்டால் என்ன செய்வது ஆனால் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஏரிக்கு கடந்து தான் பணிகளை ஒதுக்குவதாக அந்தப் பகுதியில் சென்று தான் பணி மேற்கொள்ள வேண்டும் என்று 100 நாள் பணி மேற்கொள்ளும் பெண்கள் பகிரங்க குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.
மேலும் டி.வியில் பேட்டி கொடுத்தால் உங்களுக்கு மறுநாள் 100 நாள் பணிக்கு வேலைக்கு வருவதற்கு உங்களுக்கு வராமல் துரத்தி விடுவோம் என்று அதிகாரிகள் மிரட்டுவதாக 100 நாள் பணி செய்யும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி பெண்களை அடிமை போல் திருத்தணி வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆபத்தான முறையில் இடங்களுக்கு ஏறிக்கொள் கடந்து பணி செய்ய வைக்க வேண்டுமா? வேறு எங்கும் பணிகள் இவர்களுக்கு ஒதுக்க முடியாதா? என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்
இதற்கு நிரந்தர தீர்வு காண திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 100 நாள் பணிகளில் ஏற்படும் முறைகேடுகள் மேலும் இதுபோல் அசம்பாவிதங்கள் பணிகள் குறித்து முழுமையான விசாரணை செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன் வரவேண்டும் என்று திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 27 பஞ்சாயத்து பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் –
முருகன்