Fri. Dec 20th, 2024

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடியார் வழக்கு – இன்று நடந்த விசாரணை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

இதனைய எதிர்த்து லஞ்ச ஒழிப்புதுறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்த போஸ், பெல்லா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான ஆர்.எஸ். பாரதி தரப்பில் வழக்கின் ஆரம்ப கட்டத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தற்போது லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் ஆஜரானார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் இது சட்ட நெறிமுறைகளுக்கும் மாண்புகளுக்கும் எதிரானது என நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார்.

தான் ஆஜராவதற்கு ஆட்சேபணை இருப்பதால் வழக்கிலிருந்து தான் விலகுவதாக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஒப்புதல் தெரிவித்தை தொடர்ந்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி தரப்பில் கூடுதலாக இரு ஆவணங்களை தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை ஏற்கனவே விசாரணையை முடித்து closer report தாக்கல் செய்திருப்பதாக சுட்டிக் காட்டினார்.

லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு ஆட்சியில் நடைபெற்ற தவறுகளை அடுத்து வரும் அரசாங்கம் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே இந்த வழக்கில் எடப்பாடி தரப்புக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியபோது அதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள் இந்த வழக்கை Non Miscllaneous Day எனும் வார நாட்களில் விசாரிப்பதற்காக வரும் அக்.17 ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறினர்.

அப்போது எடப்பாடியார் தரப்பு வழக்கறிஞர் தான் பிரதிவாதியான எடப்பாடியாருக்கு மட்டும் ஆஜராவதாக கூறியபோது குறுக்கிட்ட நீதிபதிகள் இரண்டாவது பிரதிவாதி யார்? என கேட்டதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் மனுதாரரான ஆர்.எஸ். பாரதி இப்போது நீதிமன்றத்துக்கு வரவில்லை.

ஆனால் அவரது இவ்வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையின்போது பாரதிக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புதுறைக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர் தற்போது இங்கு உள்ளார். ஆனால் அவர் தற்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராகி இதே வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆதரவாக வாதாடும் மூத்த வழக்கறிஞருக்கு துணையாக ஆஜராகிறார் என சுட்டிக்காட்டினார்.

இதை கேட்ட நீதிபதிகள் இவ் வழக்கின் அடுத்த விசாரணையின்போது இவற்றையெல்லாம் பரிசீலிப்பதாக கூறி வழக்கு விசாரணையை வரும் அக்டோம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

− ஐ.எஸ்.இன்பதுரை

கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்