அமைச்சர் பொன்முடி வழக்கு – ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜார்!
அமைச்சர் பொன்முடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 8ம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜரானார்.