சென்னையில் பரபரப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்த பிஆர் பாண்டியன் கைது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்து, கர்நாடகா அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பிஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
காவிரி தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து சென்னையில் முதலமைச்சர் காரை மறித்து பேராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர் பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
தற்போது காவிரி நதிநீர் விவகாரம் கர்நாடகாவில் தீவிரமடைந்திருக்கிறது. தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடக்கூடாது என்று கர்நாடகா அரசை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை மண்டியா விவசாயிகள் பந்த் நடத்தினர். நாளையும், வரும் 29ம் தேதியும் பெங்களூரில் முழு பந்த் நடைநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில பந்த் காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்களிடையே பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே பிஆர் பாண்டியன் கையில் தேசியக்கொடியோடு, மத்திய அரசை கண்டித்து, கர்நாடகாவில் பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த முழக்கமிட்டார்.
மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை மறிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அவரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். போராட்டம் செய்ய தடை செய்யப்படட் மெரினா கடற்கரையில் பிஆர் பாண்டியன் தேசியக்கொடியோடு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.