கலை அனைவருக்கும் சமமானது – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்புரை
கலை அனைவருக்கும் சமமானது என்று பரத நாட்டிய அரங்கேற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்புரையாற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டையில் டாக்டர் க.முத்துவின் மகனும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும முதன்மை அறிவியலாளருமான முத்தமிழ்செல்வன் – கண் மருத்துவர் மேனகா தம்பதியின் மகள்கள் மு.அணி,மு. செம்மொழி ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் வல்லத்திரா கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், கலை அனைவருக்கும் சமமானது. அதன் அடிப்படையிலேயே இந்த பரதநாட்டிய அரங்கேற்ற விழாவில் பங்கேற்றேன். இந்த நிகழ்ச்சியில் நாம் பங்கேற்றது அமரர் முத்து அவர்களுக்கு செய்கின்ற மரியாதை. அவர்களது குழந்தை செல்வங்களை வாழ்த்துகின்ற ஒரு நிகழ்வு என்றார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர். முத்துராஜா, சின்னதுரை, கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.