Fri. Dec 20th, 2024

இனி டுவிட்டர் பயன்படுத்துவோருக்கு கட்டணம் – எலான் மஸ்க் அதிரடி!

டுவிட்டர் பயன்படுத்துவோருக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

தற்போது, டுவிட்டர் சமூக வலைத்தளத்திற்கு எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, டுவிட்டரை பயன்படுத்தும் அனைவருக்கும் மாதம்தோறும் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரை வாங்கியதிலிருந்து டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அதிரடியாக பல மாற்றங்களை செய்துக்கொண்டு வருகிறார். டுவிட்டர் பெயரை எக்ஸ் என்று மாற்றிய பிறகு, ஊழியர்களை குறைத்தார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்ற எலான் மாஸ்க் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ குறித்து உரையாடல் நடைபெற்றது.

அப்போது எலான் மாஸ்க்குடன் பேசிய எதன் யாகு, டுவிட்டரில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவும், வெறுப்பு பேச்சுக்கு எதிராக போராடுவதற்கும் இடையே ட்விட்டரின் சமநிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த எலான் மாஸ்க், போலி கணக்குகளின் நடமாட்டமே இதற்கு காரணம், அதை தடுக்க வரும் காலத்தில் எக்ஸ் தளத்தை முழுமையான கட்டண வலைத்தளமாக்க முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.

தற்போது பிரிமியம் சேவைகளுக்கு மட்டுமே பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் விரைவில் 100% கட்டண வலைதளமான மாற்ற மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.