தற்கொலை செய்து கொள்ள போகிறேன்… – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இது என் கடைசி வீடியோ… நானும், என் அக்காவும் சாகப் போகிறோம். அதற்கு நாம் தமிழர் கட்சியினரும், சீமானும் தான் காரணம்.
மான நஷ்ட வழக்கு போடுவோம் என்றும், 4 முறை திருமணமாகியுள்ளது என்று கூறி தமிழக மக்களிடம் என்னை அசிங்கப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னை வாழ விட மாட்றாங்க. என் அக்காவை விட்டு செல்ல விருப்பமில்லை. அவளையும் அழைத்து செல்ல உள்ளேன். இனிமே எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. தொடர்ந்து டார்ச்சர் செய்து கொண்டே இருக்கிறார்கள். மான நஷ்ட வழக்கு போடுவேன் என மிரட்டுகிறார்கள். நான் சாகத்தான் சீமான் இப்படியெல்லாம் செய்கிறார். இதுதான் என் கடைசி வீடியோ. போலீசார் சீமானை கைது செய்ய வேண்டும். என்று கூறியுள்ளார்.
சீமான் மீதான புகாரை நான் திரும்பப் பெற்று விட்டேன், இனி சென்னை பக்கமே வரமாட்டேன் என்று கூற சென்ற நடிகை விஜயலட்சுமி மீண்டும், வீடியோ வெளியிட்டு சாகப்போகிறேன் என்று கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.