Fri. Dec 20th, 2024

150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு பாரிஸில் ஏலத்திற்கு வந்தது!

பாரிஸில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் ஏலம் விடப்பட்டது.

கடந்த 20ம் தேதி பாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர் எலும்புக்கூடு சுமார் 8,00,000-12,00,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.

இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் இனங்களில் ஒன்றான இகுவானோடோன்டிடேயின் துணைக் குடும்பமான காம்ப்டோசவுரிடேயின் எலும்புக்கூடாகும். பாரியின் கண்டுபிடிப்பு டைனோசர்கள் பற்றிய பல கேள்விகளுக்கு விடை கொடுக்கிறது.

2000களின் முற்பகுதியில் அமெரிக்காவின் வயோமிங்கின் மோரிசன் அமைப்பில் பாரியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு புகழ்பெற்ற அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானி மற்றும் வானியற்பியல் நிபுணர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது கொலராடோ இல்லத்தில் அதை வைத்தார். கடந்த 2022ல் ஒரு இத்தாலிய நிறுவனமான ஜோயிக் பாரியை வாங்கியது.

பாரி என்ற டைனோசர் எலும்புக்கூடு சுமார் 5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்டது.

கடந்த ஏப்ரல் மாதம் சூரிச்சில் நடந்த ஏலத்தில் டைரனோசொரஸ் ரெக்ஸின் எலும்புக்கூடு 5.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை இழுத்துச் செல்ல முடிந்தது. இது 65 முதல் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.