Sun. Oct 6th, 2024

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டததில் முதலமைச்சர் பேசுகையில், அரசை அறிவுறுத்தக்கூடிய அமைப்பாக திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது. விடியல் பயணம், காலை உணவுத் திட்டத்தின் தாக்கம் பற்றி திட்டக்குழு அறிக்கை வழங்கியது பலனை கொடுத்திருக்கிறது.

விடியல் பயண திட்டம் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.1000 சேமிப்பு கிடைக்கும். சமூகத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகளிர் உரிமை தொகை பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. இத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர வேண்டும் என்றார்.