Tue. Dec 24th, 2024

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடி – Refund பணியை ACTC தொடங்கியது!

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியின் குளறுபடி காரணமாக, ரசிகர்களின் பணத்தை ACTC நிறுவனம் Refund செய்ய பணியை தொடங்கியுள்ளது.

சென்னையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண ஆவலாக டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாகவும், தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து, சமூக வலைதளத்தில் கண்டனங்களை தெரிவித்து பதிவிட்டு வந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலாலும், டிக்கெட் வாங்கியவர்கள் செல்ல காலதாமதம் ஏற்பட்டது. அதோடு வாகனத்தை பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக சிலர் நிகழ்ச்சிக்கு வராமல் அப்படியே வீட்டுக்கு திரும்பி சென்றதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளையடுத்து, டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கும் பணியை ACTC நிறுவனம் தொடங்கியுள்ளது.