மறைந்த விஜய் ஆண்டனியின் மகள் 2 மனநல மருத்துவர்களுக்கு அனுப்பிய மெசேஜ்!
மறைந்த விஜய் ஆண்டனியின் மகள் 2 மனநல மருத்துவர்களுக்கு மெசேஜ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் நேற்று இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்செய்தி ரசிகர்களையும், சினிமாதுறையினரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் விஜய் ஆண்டனியின் மகளுக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ஆண்டனி மகள் மீராவின் இறுதி சடங்கு கீழ்பாக்கம் கல்லறையில் நடைபெற உள்ளது. தேவாலயத்தில் பிரார்த்தனைக்குப் பின் உடல் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் 2 மனநல மருத்துவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்கு மருத்துவர்கள் நேரம் ஒதுக்கிய நிலையில் முன்கூட்டியே சந்திக்க முடியுமா என்று கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.