Sun. Oct 6th, 2024

மீண்டும் அட்டகாசத்தில் இறங்கிய அரிக்கொம்பன் – பயத்தில் நெல்லை மக்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் அரிக்கொம்பன் புகுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரிக்கொம்பனை தேடும் பணியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கேரளா மற்றும் தேனி மாவட்டத்தின் குடியிருப்புகளுக்கு புகுந்து அரிக்கொம்பன் யானை மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்தது. இதனையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி, அரிகொம்பன் யானை கழுத்தில் ரேடார் கருவி பொறுத்தி, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் கோதையாறு அணை அருகே கடந்த ஜூன் 5- ந்தேதி விட்டனர்.

ரேடார் கருவி மூலம் அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை நடமாடினது.

இதனையடுத்து, நான்குமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு புகுந்த அரிக்கொம்பன் அங்கிருந்த வாழை மரங்களை சாய்த்து வாழைத்தார்களை தின்றது. மேலும், வாழைமர தோட்டத்தை அரிக்கொம்பன் சேதப்படுத்தியது. மேலும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்நிலையில், அரிக்கொம்பனின் கழுத்தில் உள்ள ரேடார் இணைப்பு சரியாக கிடைக்காததால், சுமார் 80 -க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அரிக்கொம்பனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.