Fri. Dec 20th, 2024

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருச்சி மாணவர்கள் சாதனை!

மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான நீச்சல் போட்டி விக்னேஸ் வித்யாலயா பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர். அப்போட்டியில் மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவ, மாணவிகள் 22 பேர் கலந்து கொண்டனர்.

12-வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 4×50 ப்ரி ஸ்டைல் ரிளே பெண்கள் பிரிவில் செல்வி. சர்வியா, செல்வி ஸ்விட்டி 8-ம்வகுப்பு மாணவிகள் மற்றும் செல்வி. ஜெபா பிரிங்கிளி, செல்வி. ஜெயந்திகா 7-ம் வகுப்பு மாணவிகள் தங்க பதக்கம் வென்றனர்.

50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 8-ம் வகுப்பு மாணவி செல்வி. சர்வியா வெள்ளி பதக்கமும், அதே பிரிவில் 8-ம் வகுப்பு மாணவி செல்வி. ஸ்விட்டி வெண்கலப் பதக்கமும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 100 மீட்டர் ப்ரஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் 11-ம் வகுப்பு மாணவி செல்வி. ஆசிகா, வெண்கலப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்றமாணவிகளையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியை பயிற்சியாளருமான கு. தியாகராஜன் மற்றும் பாண்டிச் செல்வி ஆகியோரையும் பள்ளியின் தலைவர் டாக்டர். ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர்.ஜலஜாகுமாரி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக் களைத் தெரிவித்தனர்.

செய்தியாளர் அமானுல்லா,
புதுக்கோட்டை