தன் மனைவியை உருவ கேலி செய்தவர்களுக்கு நடிகர் அசோக் செல்வன் தக்க பதிலடி!
தன் மனைவியை உருவ கேலி செய்தவர்களுக்கு நடிகர் அசோக் செல்வன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் ‘ஓ மை கடவுளே’, ‘தெகிடி’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘போர்தொழில்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த வருடங்களாக நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வன் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, கடந்த புதன்கிழமை திருநெல்வேலியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்திற்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால், ஒரு சிலர் கீர்த்தி பாண்டியனின் நிறத்தை வைத்து உருவ கேலி செய்து வந்தனர்.
இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த, நடிகர் அசோக் செல்வன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் உருவ கேலி செய்தவர்களுக்கு அசோக் செல்வன் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.