Sun. Oct 6th, 2024

பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள்!

பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

டெல்லியில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் உலக புகழ் பெற்றது. இந்தக் கட்டிடம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டப்பட்டது. மேலும், இங்கிலாந்து கட்டிட கலை பாணியில் இக்கட்டிடம் உருவானது.

1927-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ம் தேதி இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை வைசிராயாக இருந்த இர்வின்பிரபு திறந்து வைத்தார். இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 97 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 4 ஆண்டு வந்தால் 100 ஆண்டுகள் நிறைவடையும்.

இந்தக் கட்டிடத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் தலைவர்கள் பங்குபெற்றுள்ளனர். எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்தியாவன் ஜனநாயகத்தை இக்கட்டிடம் நிலைநிறுத்தியது.

இந்நிலையில், கட்டிடம் மிகவும் பழமையானதால், இக்கட்டிடத்திற்கு விடை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்து, அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக்கப்பட்டது. 3 மாதங்கள் முன்பே புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டாலும், பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெற்று வந்தது.

அந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நேற்றோடு விடை கொடுக்கப்பட்டது. இன்று முதல் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்று வரும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.