Fri. Dec 20th, 2024

“நான் ‘STUNT’ பண்ணல.. வண்டி தான் தூக்கிடுச்சு’: டிடிஎஃப் வாசன் பேச்சு – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை- பெங்களூரு சாலையில் வாசன் சென்றுக்கொண்டிருந்தபோது, தனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த காரை முந்திச்சென்றதோடு அல்லாமல், காருக்கு முன் சாகசம் செய்ய முயற்சி செய்தார்.

அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் பயங்கரமாக மோதி விழுந்தது. இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு காயமடைந்தார். யமருத்துவமனையில் வாசனுக்கு கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது, வாசனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாசனின் பைக்கையும், லைசென்ஸ்யும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், தெரியாமல் செய்த சின்ன விபத்துதான் இது. அந்த விபத்தே நடந்திருக்க தேவையில்லை. தவறி கீழே விழுந்துட்டேன். நான் Stunt பண்ணும்போது கீழே விழல.. விழும்போது வண்டிதான் தூக்கிடுச்சு என்றார்.

தற்போது இது தொடர்பாக வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்,
நான் விழவில்லை வண்டி தான் என்னை கீழை தள்ளியது
அதானே, வீடியோலாம் இருந்தும் இப்படி பொய் சொல்றான் ரொம்ப தைரியம் ஜாஸ்தி தான் பையனுக்கு, ஆடு களவெல்லாம் போகலைங்க! களவு போன மாதிரி கனவு கண்டேங்க என்று வாசனை பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.