விஜய் ஆண்டனி மகள் மரணம் – இயக்குநர் டி.ராஜேந்தர் உருக்கமான டுவிட்!
பிரபல விஜய் ஆண்டனி மகளுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்செய்தி ரசிகர்களையும், சினிமாதுறையினரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் விஜய் ஆண்டனியின் மகளுக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது சமூகவலைத்தளத்தங்களில பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், எனது இனிய தம்பி விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று காலமானார் என்ற செய்தி என்னை பெரிதும் தாக்கியது. இன்னும் என்னால் இந்த துயர் செய்தியிலிருந்து மீண்டு வர முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.