பிரேசிலில் பயங்கர விமான விபத்து – 14 பேர் பரிதாப பலி
பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்தில் 14 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரேசில், அமேசான் மாகாணம் மனஸ் பகுதியிலிருந்து 14 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறிய ரக விமானம் பார்சிலோஸ் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, கடும் கனமழையால் பெய்துக்கொண்டிருந்ததால், விமானம் அவசர, அவசரமாக பார்சிலோசில் தரையிறங்க முயற்சி செய்தது. அப்போது, திடீரென்று விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. விமானியால் அந்த கட்டுப்பாட்டை சரிசெய்யமுடியாமல் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த சுற்றுலாப்பயணிகள் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.