Mon. Apr 7th, 2025

திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் 6 பேர் படுகாயம்!

திருவல்லிக்கேணியில் சுற்றித் திரிந்த மாடு திடீரென முட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னையின் பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றித் திரியும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ,

இந்நிலையில், நேற்று இரவு திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மாடு ஒன்று சுற்றித் திரிந்தது.

திடீரென அந்த மாடு சாலையோரம் வந்தவர்களை துரத்த ஆரம்பித்தது. இதற்கு பயந்து கொண்டு மக்கள் ஓட ஆரம்பித்தனர்.

மேலும் சாலையில் வந்த வாகனங்களையும் அந்த மாடு துரத்தியதால் வாகன ஓட்டிகள் பதற்றமடைந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மாடு முட்டியதில் இதுவரை 6 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒரு காவலர் அடங்குவார்.

தற்போது இது தொடர்பாக மாடு உரிமையாளர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.