Fri. Dec 20th, 2024

அடேங்கப்பா… ‘ஜவான்’ பட வசூல் ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!

ஜவான் திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் எவ்வளவு வசூலாகியுள்ள நிலவரம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் ‘ஜவான்’ படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது.
இப்படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

இப்படம் வெளியான முதல் நாளே இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 2ம் நாளில் ரூ.240.47 கோடி வசூலானதாக படக்குழு தெரிவித்தது.

தற்போது, இப்படம் வெளியாகி 7 நாட்களில் ரூ.650 கோடியை தாண்டி வசூல் சாதனைப் படைத்துள்ளது. ஜவான் படம் ரூ.1000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாலிவுட்டில் புதிய சாதனையை படைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.