Fri. Dec 20th, 2024

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கவன ஈர்ப்பு கையெழுத்து இயக்கம்…

கையெழுத்து இயக்கத்தின் துவக்க நாளான இன்று அனைத்து பத்திரிகையாளர்களிடமும் கையெப்பம் வாங்கும் முதல் நிகழ்ச்சியாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மூத்த பத்திரிகையாளரும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான திரு வி. அன்பழகன் அவர்கள் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் சங்க பாகுபாடு இல்லாமல் கலந்து கொண்ட சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களின் விபரங்கள் தகவல் மேடை சாந்தகுமார், தலைநகரம் குமார், நமது நகரம் சரவணன், சட்ட கேடயம் ராஜன், கடல் சிற்பி முத்து , தொட்டில் செய்தி முருகேசன், நாகர்கோவில் வேலப்பன், இறை தரிசனம் சீனிவாச ராவ், பேனா முள் கார்த்திக், ரிப்போர்ட்டர் ஃப்ளாஷ் பாலாஜி, போலிஸ் டாக் ரவிச்சந்திரன், புரட்சி மேடை மணிவண்ணன், நுண்ணறிவு விஜய் சிங், விஜயகுமார்,
அதிரடி தீர்ப்பு சீனிவாசன், ஆயிரம் விளக்கு வினோத், ஏசியா நெட் இளங்கோ, பேராண்மை ரெனால்டு மற்றும் பல பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் இந்த கையெழுத்து இயக்கத்தில் தமிழகம் முழுவதும் சங்க பாகுபாடு இல்லாமல் அனைத்து பத்திரிகை துறை சார்ந்த நண்பர்களும் பத்திரிகை, நாளிதழ், தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகத்தினர்களும் பாகுபாடு இல்லாமல் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு ஒன்றை கருத்தில் கொண்டும் நாம் அனைவரும் பத்திரிகை துறை சார்ந்தவர்கள் என்ற கோட்பாட்டில் ஒன்றினைந்து இந்த கையெழுத்து இயக்கத்திற்காக மாவட்டம், தொகுதி, தாலுகாவில் நடைபெரும் கையெழுத்து வேட்டையில் தவறாமல் கையெப்பம் இட்டு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்…!!!

இவன்
கையெழுத்து இயக்கத்திற்காக
சக பத்திரிகையாளன்.