உள்துறை அமைச்சர் மீது பதாகை வீசிய நபர் மீது | இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு |
சென்னை விமான நிலையத்தில் நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிந்தார். அப்போது கான்வாயில் இருந்து இறங்கி நடந்து வந்து கையசைத்தார்.
எதிர்பாராத நேரத்தில் கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் கையில் இருந்த பதாகையை தூக்கி அமித்ஷாவை நோக்கி வீசினார். அங்கிருந்தவர்கள் அவரை தாக்கினர். பின்னர் போலீசார் அவரை மீட்டு கைது செய்தனர்.
விசாரணையில் அவர் நங்கநல்லூரை சேர்ந்த துரைராஜ் (67) என்பது தெரியவந்தது. இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்பாட்டத்தின் போது 15 லட்சம் கேட்டு சலசலப்பை ஏற்படுத்தினார். பாஜக தலைமை அலுவலகம் சென்றும் பிரச்சனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது மீனம்பாக்கம் போலீசார் 294(b), 506(1) என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்…