Fri. Dec 20th, 2024

சுங்கச்சாவடி அருகே கார் தீடிரென தீப்பிடித்து முற்றிலும் சேதம் |

சுங்கச்சாவடி அருகே கார் தீடிரென தீப்பிடித்து முற்றிலும் சேதம் |

கர்நாடக மாநிலம் மைசூர் மாண்டியா பகுதியை சேர்ந்த குருபிரசாத் அவரது மகள் திருமணத்திற்கு காஞ்சிபுரம்  பட்டுப்புடவை எடுக்க தனது குடும்பத்துடன் தனது காரை தானே ஓட்டி  வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் சென்று  திருமண புடவைகளை வாங்கிகொண்டு தனது காரில் மாண்டியா நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்ட குருபிரசாத் காரை நிறுத்தி இன்ஜினை திறந்து பார்த்தபோது அதில் மளமளவென தீ பிடித்துள்ளது. இதில் சுதாரித்த குருபிரசாத் காரில் இருந்தவர்களை உடனடியாக காரில் இருந்து அவசர அவசரமாக துணிகளை எடுத்துக்கொண்டு இறக்கியுள்ளனர். பின்பு தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து சுங்கச்சாவடி ஊழியர்கள் விரைந்து வந்து காரின் தீயை அணைக்க முயன்று உள்ளனர்….

ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால் உடனடியாக வாணியம்பாடி மற்றும் நாற்றம்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக மாறியது சுங்க சாவடி அருகே நடந்த இந்த விபத்தில் குருபிரசாத் உடன் பயணித்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 8 பெண்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் கார் மற்றும் அவரது செல்போன் உள்ளிட்ட உடமைகள் எரிந்து நாசமானது. தீ விபத்தினால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக நின்றதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அம்பலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

பேராண்மை செய்தி குழு