சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் |
சரவணா ஸ்டோரில் பிக்பாக்கெட் அடித்த | இளம் பெண்ணை பிடித்த ஊழியர்கள் |
சென்னை புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்ந்த யமுனா (40). இவர் நேற்று மாலை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோரில் துணி எடுக்க சென்றுள்ளார். துணி எடுத்துக் கொண்டு பில் கட்டுவதற்காக தனது பையில் உள்ள பர்சை பார்த்தபோது பையில் இருந்த பர்சு காணாமல் போயிருப்பதை கண்டு யமுனா அதிர்ச்சி அடைந்து கடை மேலாளரிடம் கூறியுள்ளார். மேலாளர் கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது யமுனா பையில் இருந்த பர்சை இளம் பெண் ஒருவர் திருடி சென்றது தெரியவந்ததால் அந்த பெண் மீது யமுனா வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்…
மேலும் பர்சை திருடிய இளம் பெண் கடையிலேயே சுற்றி திரிவதை கண்ட கடை ஊழியர்கள் இளம் பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணை நடத்தியதில் அவர் வியாசர்பாடியை சேர்ந்த திவ்யா (22) என தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த 2770 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…
பேராண்மை செய்தி குழு