கஞ்சா விற்ற மூவர் கைது 12 கிலோ கஞ்சா மற்றும் 7 கத்திகள் பறிமுதல் |
கஞ்சா விற்ற மூவர் கைது 12 கிலோ கஞ்சா மற்றும் 7 கத்திகள் பறிமுதல் |
சென்னை பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலிருந்து பல இடங்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் தேடி வந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த வீரமருது (28) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது பெரும்பாக்கத்தில் உள்ள 8- அடுக்கு குடியிருப்பு பகுதியில் உள்ள சுபாஷ் (27) மற்றும் சந்தோஷ் (27) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வதாக கூறியதால் போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1-கிலோ 800- கிராம் கஞ்சா மற்றும் 7- கத்திகளை பறிமுதல் செய்து இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் வசிக்கும் பார்வதியை கைது செய்ததில் அவரிடம் சுமார் 11- கிலோ 100 – கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்ணகிநகரை சேர்ந்த செங்கா என்பவர் தான் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக கூறியுள்ளனர்….
அவர் மீது வழக்கு பதிவு செய்த செம்மேஞ்சேரி போலீசார் அந்த நபரை தேடி வருவதாக தெரிவிக்கின்றனர்…
பேராண்மை செய்தி குழு