Fri. Dec 20th, 2024

தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் மகன் கைது |

தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன் கைது |

சென்னை திருமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த பழனி (60). இவர் மீன்பாடி வண்டி ஓட்டி வருபவர் இவரது மகன் கருப்பையா (30). இவரது மகனுக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் மனைவி விட்டு பிரிந்து சென்றதில் கருப்பையா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் வீட்டில் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது…

இதனால் கோபமடைந்த மகன் கருப்பையா திடீரென்று அரிவாளை எடுத்து வந்து பழனியின் தலையில் வெட்டியுள்ளார்.மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த பழனியை குடும்பத்தினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். வழியிலயே பழனி இறந்து விட்டார். இது தொடர்பாக தந்தையை கொலை செய்த மகன் கருப்பையாவை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்…

பேராண்மை செய்தி குழு