அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |
நட்சத்திர குறியீட்டில் பதிமூன்றாவதாக வரக்கூடிய அஸ்தம் நட்சத்திரம் செயல்பட தயார் நிலையில் இருக்கக்கூடிய கையின் வடிவமாகும். நட்சத்திர அதிதேவதை சூரியன், நட்சத்திர அதிபதி சந்திரன், நட்சத்திர விலங்கு பெண் எருமை, நட்சத்திர பறவை பருந்து, நட்சத்திர கணம் தேவகணம், நட்சத்திர மரம் ஆத்தி, அஸ்த நட்சத்திர காரர்கள் போதுவாகவே மன வலிமை கொண்டவர்களாகவும் கலை நுணுக்கங்களை வெளிப்படுத்தும் அற்புத கலைஞர்களாகவும் உங்களுடைய கைகள் கலை நுணுக்கங்களை வெளிக்காட்டும் அற்புத கருவிகள் ஆகும். சிற்பம் செதுக்குதல், முகபாவத்தோடு தங்களது கருத்தினை வெளியிடுதல், நடனத்தில் அபிநயங்களை சிறப்பாக வெளிக்காட்டுதல், ஓவியம் வரைதல், யுத்தக்கலைகளில் சிறந்து விளங்குதல் ஆகிய திறன்களை உள்ளடக்கிய உங்களுக்கு கலைத்துறை பொருத்தமான துறை நட்சத்திர அதிபதி சந்திரனாக அமைவதால் கற்பனை சக்தி கொண்டு கதை, கவிதை, நாவல், என எழுத்துலகில் பிரகாசிப்பீர்கள். நட்சத்திர அதிதேவதையாக சூரியன் இருப்பதால் தலை கணம் வராமல் பார்த்து கொள்ளுங்கள். சூரியன் உங்களுக்கு நிர்வாக திறமையை தருகின்றார். பரிகாரம் – சூரியனும் சந்திரனும் நட்சத்திரத்தை ஆளுகின்றதால் சிவ பெருமான் பார்வதியை ஞாயிறு அல்லது திங்கட்கிழமைகளில் வழிபடுதல் வேண்டும். குறிப்பாக அக்னி தத்துவமான அண்ணாமலையை ஞாயிறு அன்றும் நீர் தத்துவமான திருவானைக்காவில் அருள் பாலிக்கின்ற ஜம்புகேஸ்வரரை திங்கள் அன்று வழிபட்டுவதால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வெப்பம் தகிக்கின்ற கோடைகாலங்களில் நீர் தாகத்தில் வருவோருக்கு நீர்மோர் தானம் செய்து வந்தால் கிரக தோஷம் கடுமை குறைந்து குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்…
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ் தொடர்புக்கு -9003061806