உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும் பரிகாரங்களும் |
நட்சத்திரங்களின் குறியீட்டில் பன்னிரெண்டாவதாக வரக்கூடிய உத்திரம் நட்சத்திரம் படுக்கையின் வடிவம் கொண்டது. நட்சத்திர அதிதேவதை ஆர்யமா ஆதித்யர்களில் ஒருவரான இவர் வளத்தினை தருகின்ற தெய்வம், நட்சத்திர மிருகம் எருது, நட்சத்திர பறவை கிளுவை, நட்சத்திர மரம் அலரி. மூவகை கணங்களில் மனித கணம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுய கவுரவத்தை விரும்புகிறவர்கள் கடின உழைப்பாளி உஷ்ண தேகமுடைய உங்கள் கண்கள் சிவந்து காணப்படும். மிக எளிதில் கோபம் கொள்ள கூடிய நீங்கள் மனதில் உள்ள கருத்துக்களை தைரியமாக கூறுபவர்கள். சிறு வயது முதலே நிர்வாக திறமை பெற்றிருக்கும் நீங்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பீர்கள். பெரும்பாலும் உத்திரம் நட்சத்திர காரர்களுக்கு அரசு துறை சார்ந்த முன்னேற்றம் ஏற்படும். நட்சத்திரம் மற்றும் ராசியை சூரியன் ஆள்வதினால் அரசியலில் சிறப்பாக செயல்பட்டு உயர் நிலையை அடைவீர்கள். இயற்கையிலேயே பலசாலியான நீங்கள் விளையாட்டு துறையில் முத்திரை பதிப்பீர்கள். உத்திர நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பேச்சாளர்களாக விளங்குவார்கள். கன்னி ராசியில் பிறந்தவர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள்.தொழில்கள் – மரச்சாமான்கள் தயாரித்தல், ஆப்டிக்கல்ஸ், எலும்பு மூட்டு சார்ந்த மருத்துவம், பேச்சாளர்கள், கலைஞர்கள், மற்றும் அரசியல் சார்ந்த பொறுப்புகள்… பரிகாரம் – ஞாயிறு அன்று சிவபெருமானை செவ்வரளி மலர் சாற்றி வழிபாடு செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வந்தால் தடைபட்ட பணி உயர்வு,பதவி உயர்வு கிடைக்கும். குறிப்பாக அக்னி தத்துவமாக உள்ள அண்ணாமலையை ஞாயிறு அன்று கிரி வலம் வர வாழ்க்கை வசந்தமாகும். வருடத்திற்கு ஒரு முறை சூரியனார் கோவிலுக்கு சென்று வந்தால் கிரக தோஷங்களின் கடுமை குறையும்…
அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ் தொடர்புக்கு – 9003061806