கணவரிடம் உள்ள தனது சொத்துக்களை மீட்டு தர | காவல் ஆணையர் அலுவலகத்தில் சீரியல் நடிகை புகார் |
கணவர் கொலை மிரட்டல் விடுவதாக கூறி சீரியல் நடிகை | காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் |
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ (32). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஈஸ்வர் ரகுநாதன் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயஸ்ரீ மறுமணம் செய்து கொண்டு சென்னை அடையார் பகுதியில் உள்ள தி.எம்ப்ரஸ் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் இரண்டாவது கணவர் ஈஸ்வர் ரகுநாதன் (34) 12க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்களை திருடி அவற்றை வைத்து சூதாடி தோற்று வெளியில் லட்ச கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்டால் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஈஸ்வர் ஜெயஸ்ரீயை அடித்து துன்புறுத்தியதில் ஜெயஸ்ரீ அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த செய்தியை தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அடையார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும். போலீசார் தரப்பில் வழக்கு பதிவு செய்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காமாட்சி தலைமையில் விசாரணை மேற்கொண்டு 498ஏ (வரதட்சணை கொடுமை ), 420 (நம்பிக்கை மோசடி),506(1) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வர் ரகுநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
இந்நிலையில் இன்று நடிகை ஜெயஸ்ரீ சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் ஈஸ்வருக்கு பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவரை ஈஸ்வர் திருமணம் செய்ய முயல்வதாகவும் அதற்கு ஈஸ்வரின் தாய் சந்திரா என்பவரும் உடந்தை எனவும் ஜெயஸ்ரீ அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்…
இதனையடுத்து தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகை ஜெயஸ்ரீ கூறினார். மேலும் தனது மகளுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு தந்ததாகவும் அவர் கூறினார். பின்னர் நடிகை மகாலட்சுமி என்பவருடன் ஈஸ்வர் தொடர்பில் இருந்து வருவதாகவும் திருமணத்திற்கு பிறகு ஈஸ்வர் குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கம் மற்றும் சூதாட்டத்தில் அதிகமாக ஈடுபட்டதாக நடிகை ஜெயஸ்ரீ குற்றச் சாட்டினார். மேலும் தொடர்ந்து குடிபோதையில் தன்னை தாக்கி கொடுமை படுத்தி குடிப்போதையில் தனது குழந்தையிடம் பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாகவும் மேலும் தன்னை மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்து சூதாட்டத்தில் ஈஸ்வர் இழந்ததாகவும், என்னிடம் இருந்து பறித்த பணத்தை பெற்று தருமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாக அவர் கூறினார்…
பேராண்மை செய்தி குழு