Fri. Dec 20th, 2024

ஆட்டோவில் 2 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்ட பெண் | மேலும் ஒருவர் கைது |

ஆட்டோவில் 2 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்ட பெண் | மேலும் ஒருவர் கைது |

சென்னை கோயம்பேட்டில் இருந்து மாதவரம் வழியாக ஆட்டோவில் கஞ்சா எடுத்துச் செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள மாதவரம் ரவுண்டானா அருகே வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டபோது ஆட்டோவில் அந்த வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்ததால். மேலும் அவர்கள் வந்த ஆட்டோவை சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்….

விசாரணையில் வண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் தெருவை சேர்ந்த பிரியலஷ்மி (22) மற்றும் பாடி ராஜா தெருவை சேர்ந்த முகமது சம்சுதீன் (36) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவர பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த ஆட்டோ மற்றும் 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

பேராண்மை செய்தி குழு