மழைநீர் தேங்காமல் கண்காணிக்க | 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை காவல் ஆணையர் ஏ.கே.வி, |
சாலைகளில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க | 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை காவல் ஆணையர் ஏ.கே.வி, |
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மழை பெய்யும் நேரங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது…
அதன் அடிப்படையில், கனமழை பெய்யும் நேரத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் காவலர்கள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கீழ்ப்பாக்கம் கெங்குரெட்டி சுரங்க பாதை மற்றும் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்க பாதை உள்ளிட்ட இடங்களில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அவசர காலங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்…
அப்பொழுது பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், மழைக்கால வெள்ள தடுப்பு நடவடிக்கை சென்னை மாநகராட்சி சார்பிலும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டது.
சென்னையை பொருத்த வரையில் முக்கியமான 14 சுரங்கப்பாதைகள் உள்ளன. ஆனால், இம்முறை பெய்த கனமழையின் காரணமாக ஒரு சுரங்கப்பாதையில் கூட மழைநீர் தேங்கி விடாமல் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். மழைநீர் தேங்கி மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வெள்ள தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை காவல் துறையும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன…
வெள்ள தடுப்பு நடவடிக்கையை கண்காணிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை உள்ளது என்றும், 15 மண்டல அதிகாரிகள் மற்றும் 12 துணை ஆணையர்கள் வெள்ள தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், மின்சாரத் துறை, காவல்துறை சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும், இதற்கென வாட்ஸ்ஆப் குழுக்கள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும். அந்த குழுவில் மழை தேங்கிய இடங்கள் குறித்து பதிவிட்டால் உடனே அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்…
பேராண்மை செய்தி குழு