மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும், பரிகாரங்களும் |
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பலன்களும், பரிகாரங்களும் |
நட்சத்திர குறியீட்டில் பத்தாவதாக உள்ள மகம் அலங்கரிக்கப்பட்ட அரியசானத்தின் வடிவம் கொண்டது. நட்சத்திர தெய்வம் பித்ரு, நட்சத்திர அதிபதி கேது, நட்சத்திர மரம் ஆலமரம், நட்சத்திர கணம் ராட்சஷ கணமாகவும், நட்சத்திர விலங்கு ஆண் எலி, நட்சத்திர பறவை ஆண் கழுகு, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மங்காத புகழுக்கு பேர் போன நீங்கள் கடின உழைப்பாளிகள். அரசு துறைகளில் உள்ளவர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். ஆரம்ப காலங்களில் சிறிய வேலையில் அமரும் நீங்கள் படிப்படியாக முன்னேறி தலைமை நிலைக்கு வருவீர்கள். மகத்தில் பிறந்தோர் ஜகத்தை ஆள்வர் என்ற பழமொழிக்கு ஏற்றது போல கடினமாக உழைத்து இலட்சியத்தை அடையும் நபர்கள் என்று கூறலாம் சுய ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் மகம் நட்சத்திரத்தில் இருந்து ஜீவன ஸ்தானத்தோடு தொடர்பு பெற்றால் மிக சிறந்த ஆளுமை பண்புடன் தலைமை பதவியை அடைவது உறுதியாகும். மக நட்சத்திரத்தில் சனி, ராகு போன்ற கிரகங்கள் பயணிக்கின்ற வேலையில் அசுப பலன்களை குறைத்து தரும் கலைகளில் ஆர்வம் உள்ள உங்களுக்கு கலைத்துறையில் நிச்சயமாக இடம் கிடைக்கும். நட்சத்திர அதிபதி கேதுவாக இருப்பதினால் ஆன்மீக பாதையில் வளர்ச்சி ஏற்படும் சட்டத்துறை, தொல்லியல் ஆராய்ச்சி, வரலாறு ஆகிய துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். ராசி அதிபன் சூரியனின் ஆளுமை அதிர்ஷ்டம் ஏற்படுவது உறுதி சுப காரியங்களுக்கு ஏற்ற நட்சத்திரமாக மகம் விளங்குகின்றது…
பரிகாரம் – நட்சத்திர விலங்கு எலியாகவும், நட்சத்திர மரம் அரசமரமாகவும் இருப்பதால் அரச மரத்தடியில் அமர்ந்து அருள் செய்கின்ற ஆணை முகனை புதன் வெள்ளி அன்று ஆராதனைகள் செய்ய வாழ்க்கை வளம் பெறுவதை கண் கூடாக காண்பீர்கள். குறிப்பாக நட்சத்திர பறவையாக கழுகு இருப்பதால் கழுகினை வாகனமாக கொண்ட ஸ்ரீமன் நாராயணனை சனிக்கிழமைகளில் வணங்கி வழிபட்டு கண் பார்வை சம்பந்தமாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு சிகிச்சைக்கு உண்டான பண உதவிகளை செய்து வர தடைபட்ட தொழில் விருத்தியாகும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் வருவதையும் காணலாம்…
தொடர்புக்கு அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ் – 9003061806.