Mon. Oct 7th, 2024

பூச நட்சத்திரகாரர்களின் பலன்களும் – பரிகாரங்களும் |

பூச நட்சத்திரகாரர்களின் பலன்களும் – பரிகாரங்களும் |

நட்சத்திர குறியீட்டில் எட்டாவதாக வருகின்ற பூச நட்சத்திரம் மிகவும் சுப தன்மை வாய்ந்தது. நட்சத்திர அதிதேவதை பிரகஸ்பதி, நட்சத்திர அதிபதி சனிபகவான். நட்சத்திர கணம் தேவ கணம் ஆகும். நட்சத்திர விலங்கு ஆண் ஆடு, நட்சத்திர மரம் அரசு, நட்சத்திர பறவை நீர் காகம். பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராசி அதிபன் சந்திரனாக இருப்பதால் பார்பதற்கு ரம்யமாக காட்சி அளிப்பவர்கள். கற்பனைவளம் கொண்டு காவியங்களை படைக்கும் படைப்பாளிகளாக விளங்குவீர்கள். உங்களுடைய உடலும் உள்ளமும் பரிசுத்தத்தை பிரதிபலிக்கும். பன்முகத்திறமை கொண்டுள்ள உங்களுக்கு எந்த துறையிலும் சிறப்பாக செயலாற்ற முடியும். சமுக சேவைக்கு நீங்களே பொருத்த மானவர்கள். அரசியல் நன்றாக வரும், சுதந்திர இந்தியாவின் பிரதமர்களில் ஐவர் கடக லக்கினத்தை ராசியாக கொண்டவர்கள். அரசியலில் உச்சத்தை தொடும் நீங்கள் நண்பர்களிடம் மிக எளிதாக ஏமாந்து விடுவீர்கள்…

நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை ராணுவம், காவல்துறை, கலைத்துறை, சட்டம், ஆன்மிகம் என அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். நட்சத்திர அதி தெய்வமாக குருவாக இருப்பதினால் ஆசிரியர் பணி மிக சிறப்பாக வரும். பூச நட்சத்திரத்தில் அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். பூச நட்சத்திரத்தில் அசுப கிரகங்களான சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் பயணிக்கும் சமயத்தில் அசுப தன்மை குறைந்து காணப்படும். சுபகிரகங்களின் சுபத்தன்மை மேலும் கூடுதலாக இருக்கும். பரிகாரம் – உங்கள் நட்சத்திர மரமான அரச மரத்தடியில் அமைந்துள்ள வினாயகரை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வணங்கி வழிபாடு செய்து வர தடைகள் விலகி காரியம் கைகூடும். நட்சத்திர அதிதெய்வம் பிரகஸ்பதியாக இருப்பதினால் தக்ஷிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில்நெய்தீபம் ஏற்றி வணங்கி விட்டு மூன்று எண்ணிக்கையுடன் ஏழை முதியோர்களுக்கு இனிப்புடன் உணவுகளை தலா 102 ரூபாய் வெற்றிலை பாக்குடன் தட்சணையாக கொடுத்து அவர்களிடம் ஆசி பெற்றால் பிருகஸ்பதி மகிழ்ச்சி அடைந்து அளவில்லாத செல்வத்தை வாரி வழங்குவார். சொந்தமாக கம்பெனி, தொழிற்சாலை வைத்துள்ள நட்சத்திர அன்பர்கள் ஏழை நபர்களை வேலைக்கு அமர்த்தினால் தொழில் கடவுளான தக்ஷிணாமூர்த்தி உங்கள் தொழிலை முதன்மை நிலைக்கு உயர்த்துவது உறுதி…

உங்கள் அருள்வாக்கு ஜோதிடர் அக்னீஷ்