புனர்பூசம் நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |
புனர்பூசம் நட்சத்திரத்தின் பலன்களும் – பரிகாரங்களும் |
நட்சத்திர குறியீட்டில் ஏழாவதாக வரக்கூடிய புனர்பூசம் அம்புறாத் தூளியின் வடிவம் கொண்டதாகும். நட்சத்திர அதிதேவதை அதிதி, நட்சத்திர அதிபதி குரு, நட்சத்திர கணம் தேவகணம், நட்சத்திர விலங்கு பெண் பூனை, நட்சத்திர மரம் மூங்கில், நட்சத்திர பறவை அன்னம் ஆகும். புனர்பூச நட்சத்திர அன்பர்கள் பார்வைக்கு சாத்வீகமாக தோன்றும் உங்களை யாராவது வலிய வந்து சீண்டும் போது உங்களுடைய விஸ்வரூபத்தை காண்பார்கள். பொது காரியங்களில் சேவை செய்யக்கூடிய உங்களிடம் தலைமை பண்புகள் நிறைந்திருக்கும். நிரம்பிய அறிவினை பெற்றுள்ள நீங்கள் நிறை குடமாக சத்தமின்றி சாதிப்பீர்கள். கொள்கை கோட்பாடுகளோடு வாழக்கூடிய லட்சிய புருஷர்களாக திகழ்வீர்கள் கவிதை, கட்டுரை, காவியங்கள் இயற்றும் படைப்பாளிகள் நீங்கள் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். உங்கள் சுய ஜாதகத்தில் புதன் அல்லது சுக்கிரன் புனர்பூசத்தில் வலுப்பெற்று ஐந்தாம் இடத்தோடு தொடர்பு கொள்ளும் போது கலைத்துறையில் சாதனை படைப்பீர்கள். இங்கே குருபகவான் இருந்து ஜீவன ஸ்தானத்தோடு தொடர்பு கொண்டால் கலைகள் கற்பிக்கும் ஆச்சார்யர்களாக விளங்குவீர்கள். புனர்பூசம் நாலாம் பாதத்தில் சந்திரன் பலம் பெறுகின்ற போது சமூகத்தை சீர்படுத்தும் லட்சிய புருஷர்களாக விளங்குவீர்கள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இதற்கு சிறந்த உதாரண புருஷர் ஆவார். எவ்வளவு தான் வெளி விவகாரங்களில் ஈடுபட்டாலும் உங்கள் லட்சிய பாதையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட நீங்கள் யோகக் கலையில் நுட்பங்களை தெரிந்து வைத்திருப்பீர்கள்… பரிகாரம் – சனிக்கிழமை மற்றும் ஏகாதேசி நாட்களில் ராமபிரானை வணங்கி வழிபாடு செய்யுங்கள். நட்சத்திர விலங்கு பூனையாக இருப்பதால் மயிலாடுதுறையில் உள்ள புனுகீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள், மூங்கில் மரத்தினை ஸ்தல விருட்சமாக கொண்டுள்ள திருப்பாச்சூர், திருவெண்ணெய் நல்லூர், திருநெல்வேலி, திருவேட்களம், ஆகிய இடங்களுக்கு சென்று வணங்கி வழிபட்டு ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்து வந்தால் காரிய தடைகள் விலகி அதிர்ஷ்டம் விருத்தியாகும் சினிமா நட்சத்திர கலைஞர்கள் நட்சத்திர பறவையான அன்னத்தினை வாகனமாக கொண்டிருக்கும் கலைமகளை ஏகாதசி நாட்களில் சந்திர ஓரையில் வணங்குவதன் மூலம் தொழில் விருத்தியாகும்…